பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான பெண்களுக்கான கால்பந்துப் போட்டி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான பெண்களுக்கான கால்பந்துப் போட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில உள்ள  உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை மைதானத்தில்  நடைபெற்றது. இதில் 12 உறுப்புக் கல்லூரிகளில் இருந்து 240 மாணவியர்கள்பங்கு பெற்றனர். இப்போட்டிகளின் முடிவில் திருநெல்வேலி  ராணி  அண்ண  அரசு மகளிர்கல்லூரி  அணி  முதல் இடத்தையும், திருநெல்வேலி ம.சு.பல்கலைக்கழக அணி!இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி  அணி  மூன்றாவது இடத்தையும், தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரி  அணி நான்கவது இடத்தையும் பிடித்து. வெற்றி கோப்பைகலை கைப்பற்றினர். இந்நிகழ்வின் இறுதி நிகழ்வான  பரிசளிப்பு  நிகழ்வில் ம.சு.பல்கலைக்கழக துணை வேந்தர்  பேராசிரியர் முனைவர்   திரு.ந.சந்திரசேகர் அவர்கள் தலைமை தாங்கி  கலந்து கொண்டு வெற்றி பெற்ற    கல்லூரி  அணிகளுக்கு சுழற்கோப்பையை வழங்கி பாரட்டினார்.