தமிழ்நாடு சாப்ட்பால் சங்கம் சார்பில் 11வது மாநில சீனியர் சாப்ட்-பால் சாம்பியன்ஷிப் போட்டி மேட்டூர் வள்ளுவர் வாசகி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுலளில் போட்டிகள் நடைபெற்றது லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது.
ஆண்கள் பிரிவில் முதல் அரை-இறுதி போட்டியில் கோவை அணி 2-0 என்ற ஸ்கோர் கணக்கில் வெற்றி பெற்றது.இரண்டாவது அரை-இறுதி போட்டியில் சேலம் அணி 1-0 என்ற ஸ்கோர் கணக்கில் வெற்றி பெற்றனர்.நடைபெற்ற இறுதி போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
பெண்கள் பிரிவில் முதல் அரை இறுதி போட்டியில் திருச்சி அணி 7-0 என்ற ஸ்கோர் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.நடைபெற்ற இரண்டாவது அரை-இறுதி போட்டியில் கிருஷ்ணகிரி அணி 2-1 என்ற ஸ்கோர் கணக்கில் ராணிபேட்டை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.நடைபெற்ற இறுதி போட்டியில் திருச்சி அணியை 13-17 என்ற ஸ்கோர் கணக்கில் கிருஷ்ணகிரி அணி வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றனர்.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் பரிசுகளும் வழங்கபட்டது



Leave a Reply