அகில இந்திய தடகள சங்கம் (ATHLETICS FEDERATION OF INDIA) நடத்திய 19 ஆவது தேசிய அளவிலான மாவட்டத்திற்கு இடையேயான தடகளப்போட்டி குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப் போட்டியில் இந்தியா முழுவதிலும் மாவட்ட வாரியாக வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர். கோவை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 13 பேர் பங்கேற்றனர். இதில் 16 வயது பிரிவில் , அத்லெட்டிக் ஃபவுண்டேஷன் இல் பயிற்சி பெற்று சாவரா வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த சைனி நித்திலா குண்டு எறிதல் போட்டியில் தங்க பதக்கமும் கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளியைச் சேர்ந்த அபிநயா 80மீ தடையொட்ட போட்டியில் வெண்கல பதக்கமும் வென்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்கள்.


Leave a Reply