2025 விளையாட்டு போட்டிகள், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில்

கோவை மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ஸ்ரீ ஈஸ்வர் தீரன் 2025 விளையாட்டு போட்டிகள், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில்

 நடைபெற்றது. இப்போட்டிகளில் 12 அணிகளுக்கு மேல் பங்குபெற்றனர். பெண்களுக்கான எறிபந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி  அணியினர் போட்டியில் பங்குபெற்று, எறிபந்து போட்டியில் இரண்டாம் இடமும், சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்று  வெற்றி பெற்றுள்ளனர்.  இவ்வணியினரைப் பாராட்டி, கல்லூரியின் நிர்வாகத்தினர்,அறங்காவலர்,இயக்குநர்,முதல்வர்,பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.