கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் 4 ஆம் ஆண்டு கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் விழா கோவை நேரு விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கியது . இப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 25 கிளப்புகள் என சுமார் 1500 ஏற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கோப்பைகளையும் பெற்றனர் . போட்டிகள் நடைபெற உறுதுணையாக இருந்த எஸ் என் எஸ் கல்வி நிறுவனங்களில் தலைவர் டாக்டர் நலின் மற்றும் ரோட்டரி இண்டஸ்ட்ரியல் சிட்டி நிர்வாகிகள் இப் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை ஆர் எஸ் ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் 160 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர் . பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் 140 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் . ஆதித்யா பள்ளி 49 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர் . TRIUMPH ஸ்போர்ட்ஸ் கிளப் 47 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தைப் பெற்றனர் .
பரிசளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திரு நிஜாமுதீன் மற்றும் கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் திரு பரசுராமன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர் .



Leave a Reply