62-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் 62-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்   அகாடமி வளாகத்தில் அகாடமி  செயலாளர் R.மாடசாமி தலைமையில் நடைபெற்றது, போட்டிகளை வனச்சரகர் (ஓய்வு) S. அமானுல்லா துவங்கி வைத்தார், வெற்றி பெற்ற வீரர்களுக்கு டாக்டர் A.சீனிவாசன், மற்றும், டாக்டர் R. திவ்யா அவர்கள்  பரிசுகள் வழங்கி வாழ்த்தினர், போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் S.அஜ்மல்கான், செய்து இருந்தார். முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். வெற்றி பெற்றவர்கள் விபரம். Under – 9 பிரிவில் … 1. J தியாஸ்ரீ, 2, ஸ்ரீ ஆக்னேயா 3, A.லோகேஷ் கிருஷ்ணா 4. S.மதனா 5, S.சிந்து ஜஸ்வின் 6, B.ஹனிசாக்ஸ்தாஆகியோரும் , Under – 11 பிரிவில் … 1, N.சாய்சரவணா 2, R. சாத்வீகா 3, R. மாதவன் 4,A.ஶ்ரீஹரன் 5,S.சிந்து தனிஷ்கா 6, V.கவின்யா ….  Under – 15 – பிரிவில் 1. A.திருகார்த்திக்,2, G.ஸ்ரீனித், 3, M. அகிலேஷ்,4,S. சூரியகுமரன், 5,M. ஹரிபிரசாத் ,6,J. சன்ஜெய்குமார்  ஆகியோரும் , வெற்றி பெற்றனர், இளம் சதுரங்க வீரர்களுக்கான பரிசுகள் தேனி லிட்டில் கிங்டம் பள்ளி S.D. வருண் கிருஷ்ணன், கொடுவிலார்பட்டி கம்மவர் பப்ளிக் பள்ளி P. சாகித்தியா, K. லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளி T.யோகமித்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் வரும் 24-ம் தேதி சிவகாசியில் நடைபெறும் மாநில போட்டியில் பங்கேற்கவுள்ளனர், என்பது குறிப்பிடதக்கது,