6 வது தேசிய பேண்டி சாம்பியன்ஷிப் 2024 போட்டி

கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் கனிணி அறிவியல் துறையை சார்ந்த சைபர் செக்யூரிட்டி பிரிவின் முதலாம் ஆண்டு மாணவரான தீபக் ஹச் திருச்சியில் நடைபெற்ற 6 வது தேசிய பேண்டி சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் தமிழ்நாடு மாநில அணியை பிரதிநிதித்துவடுத்தி சிறப்பாக ஆடி,சீனியர் குழுவின் ஸ்கேட்டிங் ஹாக்கி பிரிவில் இரண்டாம் பரிசு வென்றுள்ளார்.இவரின் சிறந்த ஆட்டத்திற்காக தீபக் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேர்வாகியுள்ளார். இச்சர்வதேச ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி விரைவில் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. கல்லூரியின் நிர்வாகத்தினர்,முதல்வர்,பேராசிரியர்கள்,மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் தீபக் ஹச் அவர்களின் சாதனையை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.இவரது வெற்றி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பதோடு மாணவர்களுக்கு கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்க ஒரு பெரும் ஊக்கமாக உள்ளது.