கோவை மாவட்டம் எஸ் என் எஸ் கல்வி நிலையம் மற்றும் கோவை அத்லட்டிக் கிளப் இணைந்து 9 ஆம் ஆண்டு ஜூனியர் அத்லெடிக் போட்டி கோவை நேரு உள் விளையாட்டு
அரங்கில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் ரா. வெற்றிசெல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றிபோட்டிகளை துவக்கிவைத்தனர். உடன் எஸ்என்எஸ்
கல்வி நிலையம் நிர்வாக இயக்குனர் நலின் விமல் குமார், கே ஏ சி புரவலர் டாக்டர் சுமன் தேசிய தடகள வீரர்
கிரிஷ்பீத்தோவன் , ஒருங்கிணைப் பாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர். மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் 55கும் மேற்பட்ட பள்ளி
களிலிருந்து 2000 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பையும் பதக்கங்களும் வழஙகபட்டது.

Leave a Reply