பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்களின் தொடர் சாதனை.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியானது மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறித்தவ கல்லூரியில் வைத்து கடந்த ஜனவரி30 மற்றும் 31ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமாரி, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த 14 கல்லூரிகள் பங்கு கொண்டது. போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணியானது களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினை காலிறுதிச் சுற்று போட்டியில் 44-12 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும், அரையிறுதிப் போட்டியில் அம்பாசமுத்திரம், அம்பை கலைக் கல்லூரி அணியினரை 50-16 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கருங்கல் செயின்ட் அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினரை 52-29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் தொடர்ந்து இந்த ஹேண்ட்பால் போட்டியில் வெற்றி வாகை சூடி வருகின்றனர். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் மற்றும் பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் முத்துக்குமாரையும், கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகெங்காரம் ஏனைய பேராசிரிய பெருமக்கள், கல்லூரி விளையாட்டு குழு உறுப்பினர்கள், கல்லூரி அலுவலக பணியாளர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியானது கடந்த ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு கொண்டு கல்லூரிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். இந்த ஹேண்ட்பால் விளையாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, மேலநீலிதநல்லூர் தென்மண்டல அளவில் சிறந்து விளங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.மேலும் இந்த பல்கலைக்கழக போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தென் இந்திய பல்கலைக்கழக போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

Leave a Reply