மாணவர்கள் உலக சாதனை

கோவை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவர்கள் உலக சாதனை

கோவை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் தொடர்ந்து நிஞ்சாக் கட்டையை ஒரு மணி நேரம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்..

கோவை தீத்திப்பாளையம் பகுதியில்  உள்ள சிஎம்சி இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில்   தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பாக  உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.. 

 இதில்   தி கோல்டன்  ஸ்டார் அகாடமியில்   பயிற்சி பெற்று வரும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நிஞ்சாக் (Nunjakku ) சுற்றி உலக சாதனை படைத்தனர்..

நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிஎம்சி கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ் ஐ நாதன்,செயலாளர் திருமதி ஐ லீமா ரோஸ், முதல்வர் பிரேமலதா, நிர்வாக அதிகாரி கணேஷ் முருகன்   மற்றும் தி கோல்டன் ஸ்டார் அகாடமியின் நிறுவனர் சென்சாய்  சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.