மாணவர்களுக்கான  ஒரு நாள் ஹாக்கி லீக் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் மகா சக்தி ஹாக்கி கிளப் சார்பாக  14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான  ஒரு நாள் ஹாக்கி லீக் போட்டி கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணி முதல் இடமும் சாயர்புரம் விகாசா சைனிக் பள்ளி இரண்டாவது இடமும்  கயத்தார் மகா சக்தி ஹாக்கி கிளப்  மூன்றாவது இடமும் பெற்று சிறப்பித்தது இறுதிப்போட்டி கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகமும் சாயர்புரம் விகாசா சைனிக் பள்ளியும் விளையாடியது இப் போட்டியை அகிலாண்டபுரம் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் துவக்கி வைத்தார்கள் 4-0 என்ற கோல் கணக்கில்  கோவில்பட்டி ராஜீவ் காந்தி அணி வெற்றி பெற்றது பரிசளிப்பு விழாவில் முன்னால் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள் முன்னதாக மகா சக்தி ஹாக்கி கிளப் துணைச் செயலாளர் செல்வின் ரவி அனைவரையும் வரவேற்றார் மகா சக்தி செயலாளர் செல்வக்குமார் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது  முன்னாள்  ஹாக்கி வீரர்கள் மனோஜ் குமார், முகேஷ் குமார் , விழாவில் கலந்து கொண்டனர் இந்தப் போட்டியின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணி வீரர் செல்வமுகில் மற்றும் சிறந்த கோல்கீப்பருக்கான விருதை விகாசா சைனிக் பள்ளி கோல் கீப்பர் நிகில் குமார் பெற்றனர் போட்டியின் நடுவர்களாக மதன் ராயர், கவின், ஆகியோர் செயல்பட்டனர் இறுதியில் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா நன்றி உரையாற்றினார்