மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில், வெற்றி பெற்ற பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
உடுமலை குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது.
முதல் போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனுார் பாரதி மெட்ரிக்., பள்ளி அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி அணியை 2-1; மூன்றாவது போட்டியில், திருப்பூர் மாதிரி பள்ளி அணியை, 2-0; நான்காவது போட்டியில் திருப்பூர் செஞ்சுரி மெட்ரிக்., பள்ளி அணியை 7-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றனர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் கோப்பையை பெற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஹாக்கி அணி மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.

Leave a Reply