25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்…

கோவை அத்லெடிக் கிளப்  25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்…

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை அத்லெடிக் கிளப்  25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு  தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காலனி கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கோவை அத்லெடிக் கிளப் மூத்த உதவி தலைவர் கோவை ரமேஷ் நாள் ஒன்றுக்கு 10 கிலோமீட்டர் வீதம் ஒரு ஆண்டில் 3330 கிலோமீட்டர் கடந்ததை முன்னிட்டு பாராட்டு விழா  நடைபெற்றது…

மேலும் கோவை அத்லெடிக் கிளப் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜிஎம் மருத்துவமனை டாக்டர் சுமன் அவர்களுக்கும், கோவை  அத்லெடிக் கிளப் புதிய சேர்மன் டைக்ரகர் ஜாக்குவார்ஸ் ஜே.விஜயகுமார் அவர்களுக்கும் கிளப் நிர்வாகிகள் சால்வை அணிவித்து  வாழ்த்துக்கள் தெரிவித்தனர்…

அதனைத் தொடர்ந்து தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச காலனி கள் மற்றும் சீருடைகள் வழங்கினார்கள்…

இந்நிகழ்ச்சியில் விஜிஎம் மருத்துவமனை மருத்துவரும்  கோவை அத்லெடிக் கிளப்  தலைவருமான  Dr. சுமன், கோவை அத்லெடிக் சேர்மன் விஜய்குமார்,  விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கோவை மண்டல முதுநிலை மண்டல மேலாளர் எஸ். அருணா, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.புவனேஸ்வரி,, CDAA செயலாளர் சம்சுதீன், CDAA பொருளாளர் ஜான்சிங்கராயர், ஸ்ருதி ஏஜென்சீஸ் உரிமையாளர் சரவணகாந்தி, அத்யாயனா பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார், கோவை அத்லெடிக் கிளப் துணைத்தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கலந்துகொண்டு மாணவி மாணவியர்களுக்கு காலனிகள் மற்றும் சீருடைகள் வழங்கி சிறப்பித்தனர்.

கோவை அத்லெடிக் கிளப் செயலர் சீனிவாசன் மற்றும் துணை செயலர் சிவக்குமார், கஸ்தூரி, துரைராஜ், மேலாளர் தர்மராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது….