காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பாக 5 அணிகள் பங்குபெற்ற மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடர் சென்ற மாதம் துவங்கி லீக் முறையில் நடைபெற்றது இதன் இறுதிப்போட்டிக்கு பாரிஸ் காஸ்மடிக்ஸ் காஞ்சி ராயல்ஸ் அணியும் திரிபில் ஸ்டார் ஆன்லைன் சர்வீஸ் காஞ்சி வாரியர்ஸ் அணியும் தேர்வாகி இன்று மோதின
இதில் காஞ்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது
முதலில் ஆடிய வாரியர்ஸ் அணி 25 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது பின் ஆடிய ராயல்ஸ் அணி 25 ஓவர்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்ததால் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக வாரியஸ் அணியின் ஸ்ரீ கிருஷ்ணாவும் தொடர் நாயகனாக வாரியர்ஸ் அணியின் ஹேமேஷ் குமாரும் தேர்வு செய்ய பட்டனர்,
மேலும் தொடரில் கலந்து கொண்ட அணைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்க பட்டன,
இத்தோடர் வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இது போல தொடர்ந்து இளைஞர்களுக்கு பயனுள்ள தொடர்கள் தொடர்ந்து நடத்தபடும் என பரிசளிப்பு விழாவில் பேசிய காஞ்சி கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் திரு. வினோத் குமார் தெரிவித்தார்

Leave a Reply