பிரீமியர் லீக் 2025 சிலம்ப போட்டி

தமிழ் ட்ரெடிஷனல் ஸ்கூல் ஆப் சிலம்பம் சார்பாக எட்டாவது டிடிஎஸ்எஸ் பிரீமியர் லீக் 2025 சிலம்ப போட்டிகள் மதுரை மாடக்குளம் ஸ்ரீ வசிஷ்டா பள்ளியில்  நடைபெற்றது. போட்டியில் மதுரை,திண்டுக்கல் ,தேனி,விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, கன்னியாகுமரி, ராம்நாடு, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை மாவட்டம் பெற்றது. போட்டியின் தலைமை நடுவராக டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார். ஸ்ரீ வசிஷ்டா பள்ளியின் தாளாளர் திரு செல்வம் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் தமிழ் ட்ரெடிஷனல் ஸ்கூல் ஆஃப் சிலம்பப் பள்ளியின் மாநில மாவட்ட செயலாளரான கார்த்திக், கார்த்திகேயன், அங்குவேல், பாலகாமராஜன்,அஜித் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.