செஸ்டரில் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பயிற்சி முகாம் 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செஸ்டரில் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கராத்தே பயிற்சி முகாம் மற்றும் பட்டயத் தேர்வில் பலதரப்பட்ட மாணவர்கள் பங்கேற்று பட்டயத்தனையும் சான்றிதழ்களையும் பெற்றனர். பயிற்சி முகாமை சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ் குமார் நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் கார்த்திக் மற்றும் முதல்வர் சிவகாமி ஆகியோர் பட்டயத்தினையும் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தனர். மேலும் கராத்தே பள்ளியின் மூத்த பயிற்சியாளர்களான சென்சாய் கார்த்திக், கார்த்திகேயன், அஜித்குமார், திவ்யா மற்றும் அமலா ஆகியோர் உடன் இருந்தனர்