கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி முகாம்  நடைபெற்றது..

கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி மற்றும் குளோபல் பள்ளியில் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி முகாம்  நடைபெற்றது..

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி கவினா இன்டர்நேஷனல்  பள்ளியில் 4.3.25 அன்று  கராத்தே மற்றும் சிலம்பம்  பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர்  மற்றும் தொழில் நுட்ப இயக்குனர்  டாக்டர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். கவினா இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் திரு.கண்ணதாசன் பாண்டியன் மற்றும் தாளாளர் திருமதி ஹேமலதா கண்ணதாசன் ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை

மாநில கராத்தே ஒருங்கிணைப்பாளர் சென்சாய் அங்குவேல் செய்திருந்தார்  பயிற்சியாளர்கள் அவினாஷ் மற்றும் அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்