வீல் சேர் கிரிக்கெட் போட்டி  கோவை அணி முதல் இடம்

பாரா ஸ்போர்ட்ஸ் செண்டர் காரைக்குடி சார்பாக தமிழ்நாடு வீல் சேர் 20-20 கிரிக்கெட் போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக த்தில் நடைபெற்றது இதில் கோவை,சிவகங்கை,புதுக்கோட்டை, அழகப்பா பல்கலைக்கழக பாரா ஸ்போர்ட்ஸ் அணி ஆகிய நான்கு அணிகள் கலந்து கொண்டனர்.போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது இதில் கோவை அணி முதல் இடமும்,சிவகங்கை இரண்டாம் இடமும்,அழகப்பா பல்கலை பாரா ஸ்போர்ட்ஸ் அணி மூன்றாம் இடமும் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கபட்டது.