தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம்,தமிழ் நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்திய 19 வயதுகுட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றது.இதில் தமிழக முழுவதிலும் இருந்து 28 மாவட்டத்தை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டனர்.லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் நாமக்கல் அணி முதல் இடமும்,கரூர் அணி இரண்டாம் இடமும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் ராணிபேட்டை அணி முதல் இடமும்,சேலம் அணி இரண்டாம் இடமும் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கபட்டது.



Leave a Reply