உலக பளு தூக்கும் அமைப்பு ( WPC) நடத்திய தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 300 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 22 வயதுக்குட்பட்ட ஜூனியர் பெண்கள் 52 கிலோ எடைப் பிரிவு பவர் லிப்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த சௌந்தர்யா (வயது 22) பெஞ்ச் பிரஸ், டெத் லிப்ட், புஷ் புல் ஆகிய மூன்று போட்டிகளிலுமே தங்கப்பதக்கங்களை வென்று கோவைக்கு பெருமை சேர்த்தார்.


Leave a Reply