தென்மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் இரண்டாம் இடம்

சென்னையில் நடைபெற்ற முதலாவது ஹாக்கி இந்தியாவின் தென்மண்டல அளவிலான சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றனர் இப்போட்டியில் தமிழ்நாடு , ஆந்திர பிரதேஷ், கர்நாடகா, கேரளா , புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாடினர் ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு கர்நாடகா அணிகள் விளையாடினர் இதில் கர்நாடக அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பெண்கள் பிரிவில் ஆந்திர பிரதேஷ் 5-0 என்ற கோல் கணக்கில் தமிழக அணியை வெற்றி பெற்றது இரு அணிகளிலும் நமது கோவில்பட்டி வீரர்கள் சிறப்பாக விளையாடி தமிழகத்திற்கும் கோவில்பட்டிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் தமிழக ஆண்கள் அணியின் பயிற்சியாளராக திரு அரவிந்தன் பெண்கள் அணியின் பயிற்சியாளராக திருவேல் முருகன் சிறப்பாக செயல்பட்டு தமிழக அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர் வெற்றி பெற்ற வீரர்களையும் பயிற்சியாளர்களையும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா துணைத் தலைவர்கள் நாகமுத்து, மணிமாறன், உமா சங்கர், துணைச் செயலாளர் முருகன், மாரியப்பன், சந்தனராஜ், மற்றும் மூத்த வீரர்கள் தெய்வபாலன், சுரேஷ் குமார், கிருஷ்ணமூர்த்தி, தங்கராஜ் உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், ராம்குமார், சிவராஜ் , ஆல்ட்ரின் அதிசயராஜ் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர் ஆண்கள் அணியில் சுந்தர் அஜித், சுகுமார், கௌதம், முத்து ராஜேஷ், ஈனோக், முருகேஸ்வரன், மற்றும் பெண்கள் அணியில் ஹரிதா , ராமலக்ஷ்மி, பிரியங்கா , சுவாதி சர்மா , ஆகிய அனைவருக்கும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்