பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி

கோவை கேம்போர்ட் பள்ளி சார்பாக சூப்பர் ஸ்பைக்கர்ஸ் 2023ம் ஆண்டுக்கான 19வயது உட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன.இதில் கேம்போர்ட் பள்ளி முதல் இடமும் வேல் சர்வதேச பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தனர்.சிறந்த அட்டாக்கர் கோப்பையை தி கேம்போர்ட் இண்டர்நேஷனல் பள்ளியின் திவ்யாஸ்ரீ பெற்றார்.சிறந்த ஆல்ரவுண்டர் விருதை வேல் இண்டர்நேஷனல் பள்ளியின் சுவாதி பெற்றார்.மேலும் சிறந்த செட்டர் டிராபியை தி கேம்போர்ட் பள்ளியின் பிருந்தா பெற்றார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி சேர்மன் அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ்,மற்றும் பள்ளியின் முதல்வர் பூனம் சைல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.