சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான மண்டல ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில், அணைப்புதுார் ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி பிளஸ் 2 மாணவர் அத்வைத், 19 வயதுக்கு உட்பட்ட, 300 மீ., பிரிவில் பங்கேற்று, தங்கம் வென்றார். 16 வயது, 1000 மீ., பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவி அபர்ணா வெண்கலம் கைப்பற்றினார். பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் லட்சுமி நாராயணன், பள்ளி நிர்வாக அலுவலர் சுப்ரமணியம், பள்ளி முதல்வர் கணேஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Leave a Reply