திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் சி.பி.எஸ் பள்ளி நடத்திய மாநில அளவிலான சீனியர் மற்றும் ஜூனியர்க்கான சாஃப்ட்பால் தொடர்போட்டி எஸ்.எஸ்.எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு சீனியர், மற்றும் ஜுனியர், பிரிவில் கர்நாடகா, கோவை, ஈரோடு, கருர் போன்ற மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அணிகள் கலந்து கொண்டனர் இதில் கர்நாடகா கோப்பையை வென்றது,இரணடாம் இடத்தை SRMV கல்லூரி அணி, மூன்றாவது இடத்தை கோவை அணி பிடித்தனர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் SSM அகடாமி மேல்நிலை பள்ளி முதல்வர் திரு. கா . அப்புசாமி வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை வழங்கி வாழ்த்தினார். மேலும். இவ்விழாவில் தமிழ்நாடு சாஃப்ட்பால் சங்க தலைவர் திரு. பாலமுருகன், செயலாளர் திரு. மாதவன், சென்னை மாவட்ட சாஃப்ட்பால் செயலாளர் திரு. ராஜேந்திர பிரபு, திரு. சுரேஷ் குமார், தமிழ்நாடு சாப்ட்பால் சங்க உறுப்பினர், சேலம் மாவட்ட சாஃப்ட்பால் செயலாளர் திரு. மணி, திருச்சி மாவட்ட சாஃப்ட்பால் செயலாளர் திரு. சரவணன் சூர்யா, கிருஷ்ணகிரி மாவட்ட சாஃப்ட்பால் துணை செயலாளர் திரு. கருணாகரன் மற்றும் SSM பள்ளி குழும விளையாட்டு ஆசிரியர் திரு. மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Leave a Reply