ReplyForwardAdd reaction |
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரலாற்று துறை மாணவர் திரு பி. வெங்கடேஷ் திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர்க்கான தமிழ்நாடு மாநில ஹேண்ட்பால் அணி தேர்வில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார் மேலும் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 9.01.2024 முதல் 14.01.2024 வரையில் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ மஹாவீர்ஜியில் வைத்து நடைபெறும் ஜூனியர் தேசிய போட்டியில் தமிழ்நாடு ஹேண்ட்பால் அணி சார்பாக விளையாட உள்ளார் தமிழக ஹேண்ட்பால் அணியில் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவரை கல்லூரி கல்வி இணை இயக்குநர் திரு பாஸ்கரன், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மாணவ மாணவிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர், மேலும் தென்காசி மாவட்ட ஹேண்ட்பால் சங்க நிர்வாகிகளும் சாதனை படைத்த வீரருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Leave a Reply