பாரதிய இலக்குபந்து கழகத்தின் சார்பில் முதல் இளையோர் பிரிவில் மாநிலங்களுக்கு இடையிலான இலக்குபந்து போட்டியானது ஹைத்ராபாத், சித்திபேட்டை, தெலுங்கான மாநிலத்தில் 13.01.2024 முதல் 18.01.2024 வரை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் 26 அணிகளும் பெண்கள்பிரிவில் 14 அணிகளும் பங்குபெற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு
ஆண்கள் அணி இறுதி சுற்று வரை தகுதி பெற்று, தெலுங்கான மாநிலத்திற்கு எதிராக 11-13 என்ற இலக்கில் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தைப் பிடித்தது,
பெண்கள் அணி காலிறுது சுற்றுக்கு தகுதிப்பெற்று, மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு எதிராக 01-02 என்ற இலக்கில் தோல்வியை தழுவியது. ஆண்கள் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் திரு.ஜெகதீஷ் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார். இப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை மற்றும் பயிற்சியாளர்கள் திரு.சதீஷ், திரு.வெங்கடேசன் மற்றும் திரு.விகாஸ்
ஆகியோருக்கு தமிழக இலக்குபந்து கழக பொதுச் செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் க பா, கழக தலைவர்கள் முனைவர்.செந்தில் குமார், திரு.சசிகுமார் மற்றும் கழக தொழில்நுட்ப தலைவர் திரு.செ.கலைமுருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் திரு. பிரேம்குமார், மோனிஷா, இலக்குபந்து குடும்பத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.


Leave a Reply