தேசிய அளவிலான
ஸ்கேட்டிங் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா, டெல்லி, ஜார்கண்ட், மகாராஷ் டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட னர். இதில் தமிழ்நாடு சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து ராகுல் அகாடமி ஆப் ரோலர் ஸ்கேட்டிங்கில் பயிற்சி பெற்ற நித்திலன், மேஹா மற்றும் கிரு ஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறுவன் நித்திலன் 5-7 வயது பிரிவின் ஸ்பீடு ஸ்கேட்டிங் இன்லை னின் ஒரு தங்கமும், 2 லேப் பந்தயத் தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். சிறுமி மெஹா 7 முதல் 9 வயதுக்குட் பட்ட ஸ்பீட் இன்லைன் பிரிவில் ரோட் 1லேப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், ரிங்க் 500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், ரிங்க் 1 லேப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். சிறுமி கிரிஸ்கா ஆல்பைன்ஸ் கேட்டிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கங்களை வென்றவர்களுக்கு பயிற் சியாளர் ராகுல் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்

Leave a Reply