அகில இந்தியா அளவிலான ஹாண்ட்பால் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது.இதில் 38க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் SVN மதுரை அணியும் எதிர்கொண்டது.இதில் 35- 14 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் டீம் யுனைடெட் கர்நாடகா அணியை எதிர்கொண்டது.இதில் 28-25 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும்
மதுரை காவல்துறை அணியை எதிர்கொண்டது.இதில் 33-20 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் தமிழ்நாடு காவல்துறை அணியை எதிர்கொண்டது.இதில் 35- 39என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது . கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி
உடற்கல்வி இயக்குனர் சுதாகர் பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினார்.

Leave a Reply