மாணவர்களுக்கான  தடகள போட்டி வாழப்பாடி விளையாட்டு சங்கம் மாணவர்கள் அசத்தல்

மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி வண்டலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி மைதானத்தில் நடைபெற்றது இதில் சேலம் வாழப்பாடி விளையாட்டு சங்கம் சார்பில் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டனர் இதில்  800 மீட்டர் ஓட்டபந்தயத்தில் C.சபிதா ஸ்ரீ தங்கம்பதக்கமும்,B.பத்மா வெண்கலபதக்கமும் வென்றனர்.சிறுவர்களுக்கான 50 மீட்ட்ர் ஓட்டபந்தயத்தில் பில்பர்ட் ஆண்டனி வெண்கலம் பதக்கம் வென்றார்.75 மீட்டர் ஓட்டபந்தயத்தில் S.அக்ஷ்யா வெள்ளி பதக்கம் வென்றார்.100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் S.P.மோகிதா தங்கபதக்கம் வென்றார்.100 மீட்டர் ஓட்டபந்தயம் மாணவர் பிரிவில் A.நிதிஷ்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.நீளம் தாண்டுதல் போட்டியில் S.P.மோகிதா தங்கபதக்கமும்,C.சபிதா ஸ்ரீ வெள்ளி பதக்கமும் வென்றனர்.குண்டு எறிதல் போட்டியில் S.P.மோகிதா தங்கம் பதக்கம் வென்றார்.4X100 ரிலே போட்டியில் S.P.மோகிதா, C.சபிதா ஸ்ரீ,B.பத்மா,M.சந்தியா தங்கம் பதக்கம் வென்றனர்.பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.