மாவட்ட அளவிலான மாணவ மாணவியருக்கான சதுரங்கப் போட்டி

டேலண்ட் செஸ் அகாடமி சார்பாக சேலம் மாவட்ட அளவிலான மாணவ மாணவியருக்கான சதுரங்கப் போட்டி சேலம் உத்தம சோழபுரத்தில் உள்ள எஸ் பி எஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் 18/2/24 ஞாயிறு அன்று நடைபெற்றது இந்தப் போட்டி Under-09,11,13,25 ஆகிய நான்கு பிரிவுகளாக நடைபெற்றது இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250 மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள் இதில் ஒன்பது வயதிற்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் கவிஷ். M முதலிடமும் கௌஷிக் பி ஆர் இரண்டாம் இடமும் மாணவியர் பிரிவில் நிதிகா. M முதலிடமும் சுப்ரீதா ஏ இரண்டாம் இடமும் பதினோரு வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் சிவப்பிரசன்ன.SA முதலிடமும் ஹரி விக்னேஷ். S இரண்டாமிடமும் மாணவியருக்கான பிரிவில் ஜோஸ்னா ஸ்ரீ எஸ் முதலிடமும் சர்விகா எஸ்எம் இரண்டாம் இடமும் 13 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் விஸ்வேஸ்வர் எஸ் முதலிடமும் முகில். M இரண்டாம். இடமும் மாணவியருக்கான  பிரிவில் ரோஷினி எஸ் வி முதலிடமும் பிரதிக்ஷா ஆர் இரண்டாம் இடமும் 25 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் சர்வேஷ் எஸ் முதலிடமும் பிரதாப் எம் இரண்டாம் இடமும்  மாணவியர் பிரிவில் அக்க்ஷயா எம் முதலிடமும் பிரியதர்ஷினி செல்வராஜ் இரண்டாம் இடமும் பெற்று பரிசுகளை வென்றனர்

                                                                            இந்தப் போட்டிக்கு எஸ் பி எஸ் பள்ளி சேர்மன் எஸ் பி எஸ் சௌந்தரராஜன் அவர்களும் எம் எம் பிரிக்ஸ் உரிமையாளர் மணிகண்டன் அவர்களும் ஹைடெக் கம்ப்யூட்டர் உரிமையாளர் பிரித்திக் அவர்களும் டேலண்ட் செஸ் அகாடமி அமைப்பாளர் சக்திவேல் அவர்களும்  பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்