தடகள போட்டியில் கலக்கும் தனியார் பள்ளி மாணவன்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023- 2024 கல்வியாண்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 வயது முதல் 17 வயதுகுட்பட்டோருக்கான  100மீ, 200மீ, 600மீ 800மிஜ், 1500மீ, 4*100மீ ரீலே, 4*400M ரீலே,போன்ற பிரிவுகளில் தடகள போட்டிகள் நடைபெற்றது, இப் போட்டியில் மால்கோ  வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேட்டூர், பள்ளி மாணவன் K.S.அமுதவருஷன் என்ற மாணவன் தாரமங்கலம் மையம் தடகள  போட்டியில் 17 வயதுபிரிவில் 800மீ, 1500மீ, TRIPUL JUMP, 4*100மீ, 4*400மீ. ஐந்து பிரிவிலும் முதல் பரிசை பெற்றார், மேலும் சேலம் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிக்கு தகுதி பெற்றார், இதையடுத்து சேலம் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில்  800மீட்டர் ஓட்டபந்தயத்தில் இரண்டாம் பரிசும், 1500 மீட்டர் பந்தயத்தில்  மூன்றாம் பரிசும், 4*100 ரிலேவில் முதல் பரிசும், 4*400 மீட்டர் பந்தயத்தில் இரண்டாம் பரிசும் மொத்தம் நான்கு பரிசுகளை  பெற்று மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிக்கு தகுதி பெற்றார், சேலம் மாவட்ட தடகளச் சங்கம் நடத்திய தடகளப் போட்டியில் 16 வயது பிரிவில் 300மீட்டர் ஓட்டபந்தயத்தில் முதல் பரிசுபெற்று மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும், உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார், மற்றும் பெற்றோர் குமார்  சிவபாக்கியம்  அவர்களுக்கு பெருமை சேர்த்தார்.