சென்னை,திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், ஒரு நாள் மாநில செஸ் போட்டி, ஆவடி வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில் எட்டு வயது பிரிவில், மாணவரில் செங்கல்பட்டு கிருத்திக் கதிரேசன், மாணவியரில் சென்னை ரிதன்யா முதலிடங்களை பிடித்தனர்.
10 வயது பிரிவில் திருவள்ளூர் ஸ்ரீஜித், சென்னை அவிக்னா சக்தி; 12வயதில் சென்னை பரிதி நாராயணன், திருவள்ளூர் கார்த்திகா; 15 வயதில் காஞ்சிபுரம் பிரசன்னா, சென்னை நக் ஷத்திரா முதலிடங்களை பிடித்தனர்.
ஓபன் பிரிவில், செங்கல்பட்டு சங்கர் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, சர்வதேச மாஸ்டர் பொன்னுசாமி கொங்குவேல், வேலம்மாள் பள்ளி முதல்வர் ஷர்மிளா தேவி பரிசு வழங்கினர்.
Leave a Reply