குன்னுார் ஹோலி இன்னசென்ட் பள்ளி மாணவ, மாணவியர், ஊட்டியில் நடந்த, 27வது நீலகிரி மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.
அதில், 7, 8 வயதுக்கு உட்பட்ட மாணவியரில், அனாமிகா, பெனிதா; மாணவர்களில் கிரிஷ், சுஜித் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களை பிடித்தனர்.
9, 10 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஆரவ் நாயர், ஆரிக்யாதர்ஸ், கிரிஷவ்; 11, 12 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் தீபேஷ்குமார் ரத்தீஷ், கிரிஸ்வின், நந்தகுமார் ஆகியோர் முதல், 3 இடங்களை பிடித்தனர். மாணவியர் பிரிவில் ஆண்ட்ரியா, சுதிக்ஷா ஆகியோர், 2 மற்றும் 3ம் இடங்களை பெற்றனர்.
13 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில், சாமுவேல், பவன் ஆகியோர் முதல் இரு இடங்களையும்; 15, 16 வயதுக்கு உட்பட்ட மாணவியரில் ஜெயதர்ஷினி முதலிடமும், மாணவர்களில் பிரஜன், பிரனேஷ் ஆகியோர் முதல் இரு இடங்களையும் பிடித்தனர்.
போட்டியில் பங்கேற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் ஆவ்யாவாஸ் தலைமை வகித்து, அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட ‘கராத்தே டூ’ சங்கம் தலைமை பயிற்சியாளர் ஜோசப் பாக்கிய செல்வம், பயிற்சியாளர்கள் நவீன் ஹரிஷ், உதயகுமார், ரீனா ரீச்சல் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply