மதுரை : மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் பங்கேற்று 6 தங்கம், 3 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
ஸ்ரீஹரி, நித்திஷ், தீக்ஷிகா, முத்து ஹரிஷ், தருண், ராஜபாண்டி தங்கம் வென்றனர். அமுதன், அதித்தி, தருண்ராஜ் வெண்கல பதக்கம் வென்றனர். தங்கம் வென்ற மாணவர்கள் ஜனவரியில் சிவகங்கையில் நடக்கவுள்ள மாநில போட்டிக்கு விளையாட தகுதி பெற்றனர். அவர்களை தலைமை பயிற்சியாளர் நாராயணன்,பயிற்சியாளர்கள் ரகுராமன், சஞ்சீவ் பாராட்டினர்.

Leave a Reply