வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சாதனை

வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சாதனை*

கன்னியாகுமரி வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை, நீச்சல், டேக்வாண்டோ,  ஸ்குவாஷ்,  ஆகிய போட்டிகளில் முதல்முறையாக கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்களை வென்று அடுத்த மாதம் சனவரி இரண்டாம் வாரத்தில் மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார்கள். நீச்சல் போட்டியில் 17வயது பிரிவில் சலோமியா, தனுஷா, கெளசிகா, அபிநயா, சரண்யா, ஜெய்வன், 

குத்துச்சண்டை போட்டியில் 19வயது பிரிவில்  ராகினி, செளமியா, டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில்  சஞ்சனா ஆகியோர் மாநில போட்டியில் கலந்துகொள்கிறார்கள். 

இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பெர்லா ஜெயந்தி பொன்னாடை அணிவித்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் உடற்கல்வி இயக்குனர் காட்வின் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகளை விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினார் உதவி தலைமையாசிரியர் பென்னட் உடற்கல்வி ஆசிரியர் விமலான் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்