‘பிளேஸ் வாலிபால் லீக்’ முதலாவது சீசன் போட்டி
தமிழகத்தில் முதல் முறையாக நடந்த, ‘பிளேஸ் வாலிபால் லீக்’ முதலாவது சீசன் போட்டிகள், சென்னையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.
இந்த சீசனில், செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்ட்போர்டு, டான் பாஸ்கோ உட்பட எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கடந்த ஆகஸ்டில் துவங்கி, ‘லீக்’ முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
மொத்தம், 56 லீக் ஆட்டங்களின் முடிவில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி, அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று முன்தினம் மாலை, சாந்தோம் பள்ளி வளாகத்தில் இறுதி போட்டி நடந்தது. இரு அணிகளும் அதிரடியாக விளையாடி, பலத்தைக் காட்டியது.
முடிவில் 25 – – 18, 25 – -22, 25 — 22 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலர் ஸ்ரீ கேசவன், சர்வதேச வாலிபால் வீரர் சிவபாலன், போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்சூர்யா உள்ளிட்டோர், பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில், செயின்ட் பீட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் இருதயராஜ், சேது பாஸ்கரா பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Reply