தமிழ்நாடு இலக்குப்பந்து கழகத்துடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட இலக்குப்பந்து கழகம் நடத்திய
5வது சப்-ஜூனியர் மாநில அளவிலான இலக்குப்பந்து போட்டியானது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஸ்ரீ ரேணுகாம்பாள் உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னை, வேலூர், அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய 12கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து
இலக்குப்பந்து வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர், மற்றும் நடுவர்களுக்கான பயிற்சி பட்டறை வகுப்புகள் மற்றும் தேர்வு நடைபெற்றது. போட்டியானது 30 நவம்பர் 2024 மற்றும் 01 டிசம்பர் 2024 வரை நடைபெற்றது. இதில் 5வது சப் ஜூனியர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் திருவண்ணாமலை அணி முதல் இடத்தை பிடித்தது, மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாவது இடத்தை சென்னை அணியும் மூன்றாவது இடத்தை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி அணிகளும் ஆண்கள் பிரிவில் வேலூர் இரண்டாம் இடத்தையும் கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றன.
வெற்றி பெற்ற வீரர் வாகனங்களுக்கும் மற்றும் நடுவர் தேர்வில் தேர்வாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்
இப் போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவண்ணாமலை மாவட்ட இலக்கு பந்து கழகத்துக்கும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சதீஷ்குமார் அவர்களுக்கும்
தமிழ்நாடு இலக்கு பந்து
கழகத்தின் சேர்மன் முனைவர்.செந்தில் குமார், தலைவர் சசிகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் மாநில பொதுச்செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் க பா
நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.



Leave a Reply