மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியரில், தெய்வதர்ஷினி, 40 கிலோ எடை பிரிவிலும், கற்பகவல்லி, 35 கிலோ எடை பிரிவிலும், வனிதா, 45 கிலோ எடை பிரிவிலும், அனுஷிகா ஒற்றைக்கம்பு வீச்சு பிரிவிலும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதனால், நான்கு மாணவியரும் மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை தேடித்தந்த மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியை ஆவுடையம்மாள் லைசாள், சிலம்பம் பயிற்சியாளர் சக்திமுருகன், கவுன்சிலர் மதிவாணன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.