இன்டர்நேஷனல் சார்பில் 42வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டி

கர்நாடக மாநிலம் மங்களூரில் கராத்தே புடோகான் இன்டர்நேஷனல் சார்பில் 42வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 3 நாட்கள் நடந்தது.

இதில் தமிழ்நாடு சார்பில் வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் கணேசன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு எடை பிரிவுகளில் சண்டை, கட்டா போட்டிகள் நடத்தப்பட்டன. 35 கிலோ சண்டை மற்றும் கட்டாவில் ஆதித்யன் முதலிடம், மோனிஸ் 50 கிலோ கட்டாவில் முதலிடம் சண்டையில் 2ம் இடம், ஆதீஸ்வரன் 45 கிலோ கட்டாவில் முதலிடம், சண்டையில் 2ம் இடம், ரோகித் பிரசாத் 65.,கிலோ சண்டையில் 2ம் இடம், கட்டாவில் 3ம் இடம், தீக்சிதன் 40 கிலோ கட்டாவில் 3ம் இடம் பிடித்தனர்.

தேசிய போட்டியில் சாதித்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் செல்வகணேசை பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்