மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஜூடோ போட்டி மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவி அழகுநந்தினி 17 வயதுக்குட்பட்டோருக்கான 63 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றார். 70 கிலோ பிரிவில் நந்தினி, 40 கிலோ பிரிவில் காவ்யா முதலிடம் பெற்று மூவரும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

17 வயது 45 கிலோ எடை பிரிவில் சுந்தரேஸ்வரன் 2ம் இடம், 52 கிலோ பிரிவில் மாலதி, 73 கிலோ பிரிவில் முத்தமிழ் பாண்டி 3ம் இடம் பெற்றனர். 14 வயது 25 கிலோ எடை பிரிவில் சிவனேஷ்பாண்டி 2ம் இடம், 42 கிலோ பிரிவில் கவிப்ரியன் 3ம் இடம் பெற்றனர். பள்ளிக்குழு உறுப்பினர் தமிழரசி, செயலாளர் ராஜாங்கம், தலைமையாசிரியர் அங்குராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவீந்திரன், ஜோதிலட்சுமி பாராட்டினர்.