60 கிலோ எடை பிரிவில்  முதல் இடத்தைப் பெற்றுள்ளார்

கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவி எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையை சார்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீ வைஷ்ணவி அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் கராத்தே போட்டியில்   60 கிலோ எடை பிரிவில்  முதல் இடத்தைப் பெற்றுள்ளார் இம் மாணவியின் சிறந்த விளையாட்டின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தால் பிரதிநித்துவப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அடுத்த நிகழ்வாக பி எஸ் அப்துர் ரகுமான் கிரசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக்கழகம் சென்னையில் நடைபெற உள்ள தென் மண்டல பல்கலைக்கழக அளவிலான கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழக அணியில் இணைந்து விளையாட உள்ளார் இம்மானவியை பாராட்டி கல்லூரியின் நிர்வாகத்தினர் முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் இம் மாணவியின் வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் மாணவ மாணவிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையிலும் அமைகிறது.