பாரதிதாசன் பல்கலைக்கழக கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் கிருபாகர் 70 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் இவர் முன்னாள் மாநில கபடி விளையாட்டு வீரர் ஆவார் இப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை பெற்றோர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் சண்முகம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

Leave a Reply