சேலம் மாவட்டத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் குத்து சண்டை மற்றும் டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது இதில் வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட அளவில் குத்துச்சண்டை போட்டியில் பூமணி என்ற மாணவன் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார் .14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் திவாகர் என்ற மாணவர் இரண்டாம் இடம் பெற்றார் மேலும் டேக்வாண்டாவில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ரியாஸ் என்ற மாணவன் இரண்டாம் இடம் பெற்றான்
.இதை வாழப்பாடி சார்ப் விளையாட்டுச் சங்கத் தலைவர் குபேந்திரன், சங்க செயலாளர் வீரேந்திரதுரை, ஆகியவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் .பயிற்சியாளர் அலெக்ஸ் உள்பட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply