கோவை பிரிமியர் கிரிக்கட் லீக் போட்டிகள் துவக்கம் 

ஸ்போர்ட்ஸ் ஒன் சார்பாக கோவை பிரிமியர் கிரிக்கட் லீக் முதலாவது சீஸன் போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்தப்போட்டியில் எம்.எஸ்.பி பிரேக்கர்ஸ்,அதிபன் வாரியார்ஸ்,மேவரிக்ஸ், மில்லினியம் கிரிக்கெட் கிளப்,பி.என்.வய் சி.சி.,பொள்ளாச்சி பிரண்ட்ஸ் சி.சி,டி.வி.கே தமிழன்ஸ் என  8 அணிகள் பங்கேற்றுள்ளது.  கோவை ஸ்ரீ சக்தி பொறியியல்  கல்லூரியில் நடைபெற்ற முதல் போட்டியில், மேவரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியுடன் பிஎப்சிசி (பொள்ளாச்சி பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி) மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிஎப்சிசி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மேவரிக்க்ஸ் அணி 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அதிகபட்சமாக ஜெரால்ட் 50 ரன்களை எடுத்தார். மற்றொரு போட்டியில், எம்எஸ்பி அணியுடன் டிவிகே அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்எஸ்பி அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து பேட்டிங் செய்த டிவிகே அணி 16.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், எம்எஸ்பி அணியுடன் மேவரிக் அணி மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேவரிக் அணி 19.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த எம்எஸ்பி அணி 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய விக்கி அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். இரண்டாம் போட்டியில், எம்சிசி அணியுடன் யோகன் கிரிக்கெட் கிளப் அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த எம்சிசி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பாக விளையாடிய பெரிய மாயன் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து விளையாடிய யோகன் அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.மற்றொரு போட்டியில் PNY சி

சி அணியும் அதிபன் வாரியர்ஸ் அணியும் மோதினர்.முதலில் பேட்டிங் செய்த PNY சி.சி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் எடுத்தனர்.பின்னர் ஆடிய அதிபன் அணி 18.5 ஓவரில் 8 விக்கெட்கள இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.