இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று கோவை மாணவி சாதனை…

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்று கோவை மாணவி சாதனை..

கோவை திரும்பிய மாணவி மோனி ஸ்ரீ க்கு  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

பள்ளிகளுக்கிடையேயான தேசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று  தமிழக அளவில் கோவையை சேர்ந்த மோனிஸ்ரீ என்ற  மாணவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்…

கோவை கணபதி பகுதியை சேர்ந்த மணிகண்டன்,

மனோரஞ்சிதம் ஆகியோரின் மகள் மோனிஸ்ரீ.

சிறு வயது முதலே சின்கின் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளரும், உலக கராத்தே நடுவருமான  கணேஷ்மூர்த்தியிடம் பயிற்சி பெற்று வரும் மோனி ஸ்ரீ மாவட்ட,மாநில,தேசிய  கராத்தே போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.

இந்நிலையில்  அண்மையில் டெல்லியில் நடைபெற்ற    எஸ்.ஜி.எப்.ஐ 2024-25 சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 68 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டார்.

மகாராஷ்டிரா,

கேரளா தமிழ்நாடு,

கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம்,அரியானா, சண்டிகர் என இந்தியாவின்  28 மாநிலங்களில் இருந்தும்  தகுதி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் பல்வேறு எடை பிரிவுகளில் பங்கேற்றனர். 

இதில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்ட கோவையை சேர்ந்த  கே சர்ஸ் பள்ளி 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மோனி ஸ்ரீ 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான தனி நபர் கராத்தே (குறித்தே) போட்டியில்  -48 கிலோ எடை பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தை வென்று தமிழகத்தின் கராத்தே வரலாற்றில் ஒரு முக்கிய சாதனைப் படைத்தார். 

இந்நிலையில் கோவை திரும்பிய சாதனை மாணவி மோனி ஸ்ரீ க்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் தங்கம் வென்ற மாணவி மோனி ஸ்ரீ மற்றும் பயிற்சியாளர்  கணேஷ்மூர்த்தி ஆகியோருக்கு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா செந்தில்குமார், வேர்ல்டு கராத்தே ஃபெடரேஷன் முத்துராஜ்  மற்றும்  சின்கின் ஸ்போர்ட்ஸ் அகாடமி பெற்றோர் சங்கம், கோவை மாவட்ட கராத்தே நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு மாணவி மோனி ஸ்ரீ க்கு மாலைகள் அணிவித்தும் பூச்செண்டு வழங்கியும் வரவேற்றனர்.