கல்லுாரிகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை பல்கலையில் இடம்பெற்றுள்ள கல்லுாரிகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில், மண்டல அளவில் வெற்றி பெற்ற கல்லுாரி அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்தது.

இதன் இறுதிச் சுற்றில் ‘பி’ மண்டல அணியை எதிர்த்து களமிறங்கிய எம்.ஓ.பி., வீராங்கனையர், துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11- – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றனர்.

இரண்டாம் இடத்தை ‘ஏ’ மண்டல கூட்டு அணியும், மூன்றாம் இடத்தை எத்திராஜ் கல்லுாரி அணியும் பிடித்தன