கோவை மாவட்ட அளவிலான ஏழு பேர் கால்பந்து போட்டி எஸ்.பி.என் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் 13வயது குட்பட்டோர் மற்றும் 11வயது குட்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தபட்டது இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் கலந்து கொண்டனர்.
13 வயது பிரிவில் நடைபெற்ற முதல் அரை-இறுதி போட்டியில் பிரைடு எப்.சி அணியும் ரோன் எப்.சி அணியும் மோதின இதில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரைடு எப்.சி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னோறியது.நடைபெற்ற மற்றொரு அரை-இறுதி போட்டியில் சி.சி.எப்.ஏ அணி 7-1 என்ற கோல் கணக்கில் கோல்ட் டிக்கர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
நடைபெற்ற இறுதி போட்டியில் பிரைடு எப்.சி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிசென்றது.
11வயது பிரிவு முதல் அரை இறுதி போட்டியில் சி.சி.எப்.ஏ அணி 4-1 என்ற கோல் கணக்கில் கோல்ட் டிக்கர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் பிரைடு எப்.சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் பஸ்ட் கிக் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.நடைபெற்ற இறுதி போட்டியில் சி.சி.எப்.ஏ அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரைடு அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.



Leave a Reply