கோவை மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டி

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக 2023- 24 ஆண்டுக்கான மாவட்ட லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது

இதில் இரண்டாவது டிவிஷனுக்கான போட்டி பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது ரெட்டைமன்ட் சி .சி அணியும் கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின முதலில் ஆடிய ரெட்டைமென்ட் சி.சி எனி 35.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தனர் கோவை டஸ்கர்ஸ் அணி வீரர் A.பிரபு 4 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் ஆடிய கோவை டஸ்கர்ஸ் அணி 18.1 ஓவரில்  5 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது அதிகபட்சமாக S. விஜய் 32 ரன்கள் எடுத்தார்.

4வது- டிவிசன்

நான்காவது டிவிஷனுக்கான போட்டியில் அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் யெங்பிரண்ட்ஸ் சி.சி அணியும் மோதின முதலில் ஆடிய அக்ஷயா கல்லூரி அணி 46 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து 128 ரன்கள்  எடுத்தனர்  யெங்பிரண்ட்ஷ் அணி சார்பாக  சரத்குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ஆடியோ  யெங்பிரண்ட்ஷ் சி.சி அணி  21.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக S.ரூபக் குமார்  50 ரன்களும் S.முத்துக்குமார 42 ரன்களும் எடுத்தனர்.

5வது-டிவிசன்

ஐந்தாவது டிவிஷனுக்கான போட்டியில் ஆர்.பி குரூப் அணியும் கே.எப்.சி.சி அணியும் மோதின முதலில் ஆடிய ஆர்.பி குரூப் அணி 35 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் எடுத்தனர். அதிக பட்சமாக பினேஷ் K.B 43 ரன்களை எடுத்தார்,கே.எப்.சி.சி அணி சார்பாக செந்தில் குமார்.A 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பின்னர் ஆடிய கே.எப்.சி.சி அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன்களை எடுத்து தோல்வியுற்றனர்.

 6வது-டிவிசன்

ஆறாவது டிவிஷனுக்கான போட்டியில் வாரியர்ஸ் லெவன் சி.சி அணியும் ஆர்ஜின் ரீஜனல் சி.சி அணியும் மோதினர் முதலில் ஆடிய வாரியர் அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்கள் எடுத்தனர் சுபாஷ்.K  5 விக்கெட் களையும் ,வெற்றிவேல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய ர ஆர்ஜின் ரீஜனல் அணி 38 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

1.A.செந்தில்குமார்

5/27

கே.எப்.சி.சி

2.K.சுபாஷ்

5/16

ஆர்ஜின் ரீஜனல்