மாவட்ட அளவிலான யோகா போட்டி

 மதுரை உத்தகுடியில் உள்ள (Decathlon) உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான யோகா போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில் மேலப்பனங்காடியி லுள்ள ஜெருசலம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அதிக படியான  வெற்றிக் கோப்பையை வாகை சூடினர். இம் மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சாமுவேல் ராஜ் அவர்கள் பாராட்டினார். வாகை சூடிய சான்றிதழ்களுடன் பயிற்சியாளர் செளமியா மற்றும்  ஆசிரியர்களுடன் உள்ளனர்.