டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் நினைவு விளையாட்டு குழு,அக்னி சிறகுகள் டிரஸ்ட் மற்றும் கோவை மாவட்ட கையுந்துபந்து கழகம் இனைந்து நடத்திய கோவை மாவட்ட கிழக்கு மண்டல அணிகளுக்கு இடையேயான கையுந்துபந்து போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்றது.இதில் மொத்தம் 14 அணிகள் கலந்துகொண்டனர் நாக்-அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் அரையிறுதி போட்டிக்கு பி.எஸ்.ஜி கல்லூரி அணி,ஏ.பி.சி கிளப் அணி,எம்.ஆர்.பி மற்றும் தேவராயபுரம் ஆகிய அணிகள் முன்னேறியது.முதல் அரையிறுதி போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி அணி 2-1 என்ற செட்கணக்கில் எம்.ஆர்.பி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.மற்றொரு அரையிறுதி போட்டியில் ஏ.பி.சி கிளப் அணி 2-0 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினர்.நடைபெற்ற இறுதி போட்டியில் ஏ.பி.சி அணி 2-1 செட்கணக்கில் பி.எஸ்.ஜி கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.




Leave a Reply